தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் எம்.எட் படிப்புக்கு ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.எட் படிப்புக்கு ஜூலை 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்தப் படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.எட்., படிப்பிற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு விதிமுறையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பங்களை பல்கலைக்கழக வளாகத்திலோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.600-ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.

ஜூலை 31க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் தகவல்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற வலைத்தளத்தை நாடலாம்.