சுதந்திர தினவிழா செய்தி - முதல்வர் ஜெயலலிதா

 நாட்டின் 67வது சுதந்தின தினத்தையொட்டி சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய அவர், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின உரை நிகழ்த்திய ஜெயலலிதா தனது உரையில் கூறியதாவது : நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்;
நாட்டின் 67வது சு‌தந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைப்பதில் பெருமிதம் அடைகிறேன்; இத்தகைய வாய்ப்பை எனக்கு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி; சுதந்திரம் என்ற வார்த்தை அனைவரின் மனதிலும் நாட்டுப்பற்றையும், மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது; சுதந்திர போராட்டத்தில் தமிழர்கர்களின் பங்கு அளப்பறியது; அனைவர் மனதிலும் சுதந்திர எண்ணத்தை ஏற்படுத்துவது கல்வி; அதனால் தான் அனைவரும் கல்வி பெறும் வண்ணம் இலவச புத்தகங்கள், நோட்டுக்கள் விலையில்லா கணினி வழங்கப்படுகிறது; கடந்த 2 ஆண்டுகளில் 1200 பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது; இதனால் ஏரளாமன குழந்தைகள் கல்வி அறிவு பெற்றுள்ளனர்; கடந்த ஆண்டுகளில் புதிதாக 51,757 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; கிராமப்புற மாணவர்கள் மேல்படிப்பு வசதி பெறுவதற்காக கடந்த ஆண்ட 11 பல்கலைக்கழக உறுப்பு சாரா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஒரு அரசு இன்ஜினியரிங் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது; இந்த ஆண்டு 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 2 பல்கலைக்கழக கல்லூரிகள், 3 அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள், 11 தொழிநுட்ப கல்லூரிகள் துவங்கப்பட உள்ளது; அனைவரும் உடல் நலம் பெற அரசு சுகாதார காப்பீட்டு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது; பசுமை புரட்சியை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் அரசால் செய்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது; புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் தொழில் நிறுவனங்கள் அமைப்பதால் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது; திருமயத்தில் பிரதமர் பேசுகையில், பிரதமர் தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளங்குவதாக தெரிவித்துள்ளார்; பசுமை வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன; மத்திய அரசின் தவறான கொள்ளைகள் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்; ரூபாயின் மதிப்பு சரிவாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது; இதை சரிசெய்வதற்காக சிறப்பு அங்காடிகள் மூலம் மலிவு விலையில் தமிழக அரசு உணவு பொருட்களை வழங்கி வருகிறது; அம்மா உணவகம் போன்ற பல்வேறு விலை குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்; உணவு பாதுகாப்பு மசோதாவால் மக்கள் பாதிப்படைவதை தடுக்க தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மலிவு விலை பொருட்கள் ‌தொடர்ந்து வழங்கப்படும்; கச்சத்தீவில் உள்ள உரிமையை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது; சுதந்திர போராட்டம் தியாகிகளை மேலும் கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையை ரூ.7000 லிருந்து ரூ.9000 ஆக உயர்த்தப்படுகிறது; இதே போன்று சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதிய தொகையும் ரூ.3,500 ல் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.