சுதந்திர தினவிழா உரை - பிரதமர் மன்மோகன் சிங்


   


நாட்டின் 67 வது சுதந்திர விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு தனது சுதந்திர தின உரையை வழங்கினார். இன்று காலை ராஜ்காட்டிற்கு சென்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர், 07.30 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றும் 10வது சுதந்திர தின விழா உரை இது என்பது குறிப்பிடத்தக்கது. 



பிரதமர் உரை :

வேலைவாய்ப்பில் வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும் என நான் கண்ட கனவு நனவாகி உள்ளது; கல்வி பெறும் உரிமைச் சட்டம் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்துள்ளது; உணவு பாதுகாப்பு மசோதா மூலம் நாட்டின் 75 சதவீதம் மக்கள் பயன்பெற உள்ளனர்; உணவு பாதுகாப்பு மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்; பொருளாதாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது; 
சமீப காலமாக உலக பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது; இருப்பினும் கடந்த 9 ஆண்டுகளில் வளர்ச்சியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது; தற்போதைய பொருளாதார மந்த நிலை வெகு நாட்களுக்கு நீடிக்காது; தகவல் அறியும் உரிமைச் சட்டம் பெரிய அளவிலான ஊழல்களை வெளிக்காட்டி உள்ளது; கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய பாதையை நாடு கடந்து வந்துள்ளது; சமீபத்தில் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு பெரும் வருத்தமடையச் செய்துள்ளது; கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ்., சிந்துரக்ஷக் தீ விபத்திற்கு உள்ளானது மிகுந்த வேதனை அளிக்கிறது; அதில் உயிரிழந்த மாலுமிகளுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 
பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்தது போன்ற துயர சம்பவங்கள் இனி நாட்டில் நடைபெறாது; பாகிஸ்தான் பயங்கரவாத போக்கை நிறுத்திக் கொண்டால் மட்டுமே இரு நாடுகளுடனான சுமூக பேச்சை தொடர முடியும். இவ்வாறு பிரதமர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.கொள்கிறேன்.