மதுரை தமுக்கம் மைதானத்தில் ஓவியப் போட்டி: மழலையர்கள் பங்கேற்கலாம்

 மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் இன்று (செப்.,1) காலை 9 மணிக்கு நடக்கும் ஓவியப்போட்டியில், ஐந்து முதல் பத்து வயது வரையுள்ள மாணவர்கள், நேரடியாக பங்கேற்கலாம். பள்ளி அடையாள அட்டையுடன் வரவேண்டும். வரைவதற்கான "சார்ட்" மைதானத்தில் தரப்படும். "கிரையான்ஸ்", பென்சில், "வாட்டர் கலர்" உபகரணங்களை, மாணவர்கள் கொண்டு வர வேண்டும்.

முதல் பரிசு ரூ.2 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.ஆயிரம், 3வது பரிசு ரூ.500. செப்.,4 காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு "பொய்மைச் சிறுமதி போக்கு" தலைப்பில், ஐந்து நிமிட பேச்சுப் போட்டி நடக்கிறது.
முதல்பரிசு ரூ.3000, 2ம் பரிசு ரூ.2000, 3ம் பரிசு ரூ.1000. பள்ளிக்கு இருவர் பங்கேற்கலாம். செப்.,5 காலை 10 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கு "தமிழா பேதைமை அகற்று" தலைப்பில், ஐந்து நிமிட பேச்சுப் போட்டி நடக்கிறது. கல்லூரிக்கு மூன்றுபேர் பங்கேற்கலாம். முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000. பள்ளி, கல்லூரி அடையாள அட்டையுடன் வர வேண்டும்.
நிறைவு விழாவின் போது அனைத்து பரிசுகளும் கூப்பன்களாக வழங்கப்படும். அதன் மூலம், விரும்பிய ஸ்டால்களில் புத்தகங்கள் வாங்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் செந்தூரனை 94435 72224ல் தொடர்பு கொள்ளலாம்.தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.