ஆசிரியர் தின கவிதைகள்

நாங்கள் செய்த தவறுக்கு 
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை - நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள் 
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே 
எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள் 
உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை - நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்

எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே

எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்

உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்
இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்திருந்தாலும்
நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை ...!
 


ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்


எல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா ! 

உங்கள் சேவைக்கு 
நீங்கள் தந்த கல்விக்கு 
நன்றி சொல்வது மட்டும் போதாது 
நான் என் ஆயுள் முழுவதும் 
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன் 

உங்கள் சேவையை என்றும் 
மறக்க மாட்டேன் ! 
நன்றியுடன் உங்களை 
நினைத்துப் பார்க்கும் 

உங்கள் மாணவன் ஆசிரியர்கள்  தின நல்வாழ்த்துக்கள்!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

நாங்கள் பரிட்சை எழுத 
நீங்கள் அல்லவா படித்தீர்கள் 
நாங்கள் வெற்றிப் பெற 
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள் 

கல்லும் உடையாமல் 
சிலையும் சிதறாமல் 
எங்களை செதுக்கிய 
சிற்பி அல்லவா நீங்கள் 

மழையின் அருமை தெரியாமல் 
மழையை கண்டு ஓடுபவர்போல 
உங்களைக் கண்டு ஓடினோம் 
மழையின் அருமை 
கோடையில் தெரியும் 
உங்களின் அருமை, பெருமை 
இப்போது உணர்கிறேன் !

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்


எததனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால் 
நோக்கம், லட்சியம் ஒன்று தானே 
என் மாணவன் முன்னேற வேண்டும் 
தேர்ச்சிப்பெற வேண்டும் 
வெற்றி பெற வேண்டும் 
ஆஹா ! 
எத்தனை உயரிய எண்ணம் 
நீங்கள் அல்லவா 
வணக்கத்துக்குறியவர்கள் 


எத்தை கேலிகள் 
எத்தனை கிண்டல்கள் 
எத்தனை துன்பங்கள், தொல்லைகள் 
உங்களுக்கு செய்தோம் 
இன்று நினைக்கையில் 
என் உள்ளம் வலிக்கிறதே 
உங்கள் காலில் விழுந்து 
மன்னிப்பு கோருகிறோம் 
எங்களை மன்னியுங்கள் - ஐயா

இன்று வரையிலும் , இனிமேலும் 
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு 
நாங்கள் அடையும் புகழ்களுக்கு 
உரியவர்கள் நீங்கள் தானே - ஐயா !

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

நாங்கள் செய்த தவறுக்கு 
தண்டனை எங்களுக்கு தந்து 
வேதனையை - நீங்கள் 
அல்லவா அனுபவித்தீர்கள் 

எத்தனை அன்பு , அரவணைப்பு 
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள் 
எல்லாம் எதற்கு 
எங்கள் வாழ்வு வளம் பெறதானே 

எததனை நாள் 
மழையில் நனைந்தீர்கள் 
வெயிலில் காய்ந்தீர்கள் 
பசியை மறந்தீர்கள் 

உங்கள் குடும்பத்தைவிட 
எங்கள் நலனில் தானே 
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் நாங்கள் செய்த தவறுக்கு 
தண்டனை எங்களுக்கு தந்து 
வேதனையை - நீங்கள் 
அல்லவா அனுபவித்தீர்கள் 

எத்தனை அன்பு , அரவணைப்பு 
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள் 
எல்லாம் எதற்கு 
எங்கள் வாழ்வு வளம் பெறதானே 

எததனை நாள் 
மழையில் நனைந்தீர்கள் 
வெயிலில் காய்ந்தீர்கள் 
பசியை மறந்தீர்கள் 

உங்கள் குடும்பத்தைவிட 
எங்கள் நலனில் தானே 
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் 
இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்திருந்தாலும்
நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை ...!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

ஒவ்வொரு குழந்தைக்கும்
அதன் தாய் தெய்வம்- அல்லவா
தாய் இல்லாமல் நாம் இல்லை
தாயை சிறந்த கோவிலும்மில்லை
உண்மைத் தானே ?


அன்னையர் தினத்துக்கு
பரிசு தர வேண்டாமா ?
பரிசுடன் புறப்பட்டேன்
என்னை பெற்றதுக்கு - இலஞ்சம்

கொடுக்க முதியோர் இல்லத்திற்கு ...!

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

கை எடுத்து வணங்குகிறேன் 
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் 

நான் வாழ ! நான் முன்னேற! 
எனக்காக உழைத்தவர்கள் 
நான் இன்று இன்பம் காண 
அன்று துன்பம் பொறுத்தவர்கள் 

நான் முத்து சேர்க்க 
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள் 
என் இளம் வயதில் கண்ட 
நடமாடும் தெய்வங்கள் ! 
என் ஆசிரியர்கள்

ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

&&

நாட்கள் தோறும் மாறுசெய்து

வாரந்தோறும் வாட்டியெடுப்பீர்

தவணைமுறையில் தன்மானந்தீண்டி

ஆண்டு முழுவதும் மனம் சிதைப்பீர்

&&

ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

&&

த்தனையும் அழகாய்ச் செய்து

ஆண்டிலொரு நாளில் மட்டும்

தோள்வலிக்க மாலையிட்டு

தொடர்ந்து வந்து வாழ்த்துச் சொன்னால்

ஆசானுக்கு அதுதான் கௌரவமா? 

&&

ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

- Jesslya Jessly

எங்கள் ஆசிரியர்..!

கர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே... 
அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...சை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..!
னிய தமிழ் பயிற்றுவித்த  எங்கள் ஆசிரியையே...
னிய கதை சொல்லித்தந்த  எங்கள் ஆசிரியையே...
ன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..!
லக மொழி ஆங்கிலத்தை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...ண்மைதனை எடுத்துரைத்த எங்கள் ஆசிரியரே...
ர் கேட்க  சொல்லிடுவோம்  உங்கள் பெருமையே..!
ண் கணிதத்தை கற்றளித்த எங்கள் ஆசிரியையே...ளிமைதனை எமக்களித்த எங்கள் ஆசிரியையே...ற்றிடுவோம் உன் புகழை உலக ஏட்டினிலே..!
ம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...யங்களை நீக்கி வைத்த எங்கள் ஆசிரியரே...ழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..!
ர் நிலை சமூகஅறிவியலை படிக்க வைத்த எங்கள் ஆசிரியையே...ர்குலம் நாமெல்லாம்  என்றுரைத்த எங்கள் ஆசிரியையே...
வை போல கற்று தெளிந்தோம் உங்கள் வழியிலே..!

எஃகு போல் உடற்கல்விதனை உய்ய வைத்த எங்கள் ஆசிரியரே...

(எ)ஃகணமும் தொழுது நிற்போம் உந்தன் பணியையே..!
                                                             

(செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினம், இந்நாளில் என்னை இந்த அளவிற்கு ஆளாக்கிய எனது ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள் உரித்ததாகட்டும்... வாழ்க ஆசிரியர் குலம்...)

  1. காணிக்கை.......
மாணவனை மனிதனாக
பிரசவிப்பவர் ஆசிரியர்:
தூண்டா விளக்காய் விளங்கும் மாணவர்களை
மயிர்த்தோகை மலர்க்கரத்தால்
ஏற்றி ஒளிர்த்திட வைப்பவர் ஆசிரியர்:
காணும் நிலவினிலே - கல்வி
கலைமான் அளிப்பவர் ஆசிரியர்:
அச்சமிட்டு நாணி தொங்கிய முகத்தை
திருக்கரத்தால் நிமிர்த்திட செய்பவர் ஆசிரியர் - நித்தம்
மாணவனின் செயல்கண்டு - முத்தென
வானத்தின் நட்சத்திரம்போல்
மின்னிட செய்பவர் ஆசிரியர் - சித்திர                                             
கல்வி சோலைக்குள்ளே மாணவர்களுக்கு
ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவர் ஆசிரியர்.

நூற்பல கற்றபோது
நூலால் உயரும் பட்டம்போல் - மாணவனை    
உயர்த்திக் கொண்டே செல்பவர் ஆசிரியர்:
தீய எண்ணங்களால் சரிந்து போகாது
பருவ தூண்டுதலுக்கு அடிமை ஆகாது
ஆறாம் அறிவை ஊட்டுபவர் ஆசிரியர்:
எட்டாத வானத்தை தொட்டுவிடத்
தூண்டும் இளவயதினில்
பகுத்தறி பகலவனாய் இருந்து - மாணவனின்
கல்விக்கண் திறப்பவர் ஆசிரியர்:
ஒரு துணையும் இல்லாமல் - ஏங்கி
தவிக்கும் மாணவனை - உலகச்
சந்தைக் கூட்டத்தில் ஓங்கி உயர்த்திட செய்பவர் ஆசிரியர்.

கொளுத்தும் கோடை வெயிலின் கொடுமையால்
வியர்த்து விழிபிதுங்கி நடக்கையில்
சிரித்த முகங்காட்டி குடைக்குள் அடக்கி
அரவணைத்து அழைத்துச் செல்பவர் ஆசிரியர்:
பொய்யை பிசைந்து கதை கட்டியபோதும்
இரசித்து கதைக்கேட்டு தட்டிக்கொடுத்து
ஊக்கத்தை உரமிட்டு வள்ர்ப்பவர் ஆசிரியர்:
ஈரபசைத்தடவி இழுத்து நான்காய் மடித்து
கொடுத்த கவிதைக்கு உச்சிதனை முகந்து
முத்தமிட்டு அன்புகாட்டுபவர் ஆசிரியர்:
வகுப்புத் தோழர்களின் பெயர்கள் எல்லாம்
மறந்துப்போக ஆசிரியர் பெயர் மட்டும்
பசுமரத்தாணிப்போல் பதிந்துவிட்ட மாயம் என்ன?

அன்று,
பள்ளியின் இறுதினாள் மகிழ்ச்சியை அளித்தது.
இன்று,
ஆசிரியர்களை நினைக்கையில் மனம் வலித்தது.
பிள்ளைக்குத் தாயாகி
மாணவர்களுக்கு அன்னையாகி
தள்ளிட முடியாப் பாசத் தவிப்பினால் ஏங்குகின்றோம்
ஈன்ற தாயைப்போன்ற அனைத்து
ஆசிரிய பெருமக்களையும் வணங்கி
எங்கள் வாழ்த்துகளை
தங்கள் பொன்னான பாதத்தில்
காணிக்கையாக்குகின்றோம்............
      - ஆக்கம்:  கி.வெ.இரத்தினாம்பாள் (தமிழ்),   

1. என் அபிமான ஆசிரியர்
கல்வி -
ஆறாம் திணை
அதை பெற - நீயே துணை.
வழிப்போக்கன் நீ - எமக்கு
ஒன்பதாம் திசை காட்டிப் போனாய்.
என் ‘ஆசு’களைந்தாய்.
தூரிகை எம்மை ஓவியம் செய்தாய்
உன் -
விரல் பிடித்தே வித்தை பயின்றேன்
வினாக்களால் விழி திறந்தாய்
என் வெற்றியில் உன் வியர்வை!
நீ - என்
எட்டாம் வானவில் நிறம்;
இரண்டாம் இதயம்;
மூன்றாம் பொழுது!
தூரம் சென்றாலும்
முகப்புத்தகத்தில் முகம் காண்கிறேன்!
நீ கற்பித்த
வாழ்வியல் நெறியில் தினம் செல்கிறேன்!
  • ஆக்கம்: எஸ். மதுசூதனன், அஸிம்பிரேம்ஜி புதுச்சேரி மாவட்ட மையம்.

  1. ஆசிரியர் வாழ்த்து
இன்று -
என் வேர்களின் திருவிழா!
பூக்கள் வேர்களை
கொண்டாடும் ஒரு விழா!
தங்கள் ‘நொபல்’ செயலுக்கு
நோபல் பரிசும் பெரிதல்ல!
எழுத்தறிவித்தவன் இறைவன்
எழுதியது மறைகள்!
எங்களை எங்கள்
உள்ளேயே கடந்து செல்ல வைத்த
ஊடகம் நீங்கள்;
எழுதுகிறோம் உரைகள்!
உள்ளன்போடு உவகை கொண்டு
கசடற கற்பித்து - எங்கள்
க(அ)சடு அறச் செய்தாய்!
கற்பவர் நாள் சில
கற்பிப்பவர் யுகம் பல!
‘ஆச்சார்ய தேவோ பவ!’
  • ஆக்கம்: எஸ். மதுசூதனன், அஸிம்பிரேம்ஜி புதுச்சேரி மாவட்ட மையம்.

நகங்களில் இருந்து விரல்கள் முளைக்கும்! -ஆசிரியர் தின கவிதை


*நகங்களை வெட்டி
வகுப்பறையில் போட்டாலும்,அழகாய் எழுதும் விரல்களை 
அவற்றிலிருந்து 
எப்படியும் முளைக்க வைத்துவிடுகிறார்கள்!

*அடி பின்னும் பிரம்பில்
அறிவு பின்னும் வித்தை,
அவர்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது! 

*கரும்பலகையையும், சுண்ணாம்பையும் வைத்து
உலகத்தின் வரலாற்றையும்,
மாணவர்களின் வருங்காலத்தையும் 
ஒருங்கே எழுதும்
உலகத்தின் வடிவமைப்பாளர்கள் அவர்கள்;

* "ஒன்னுக்கு வருது மிஸ்",
என சொல்பவர்களில்,
எவனுக்கு உண்மையிலேயே 
ஒன்னுக்கு வருகிறது 
என அவர்களுக்கு மட்டுமே தெரியும்! 

*30க்கும்  34க்கும் இடையே 
முக்கி, முனகி, முட்டியவனையெல்லாம்,
அவர்கள் இரக்கப்பட்டு
35ஐ முட்ட வைத்ததால், 
விண்ணை முட்டும் 
பெரும்பணியில் இருக்கிறான்!

*லேட்டாய் போனவனை
வெளியே நிற்க வைத்து,
இன்னும் லேட்டாய் 
உள்ளே அனுப்பி,
லேட்டாய் போவதன் 
சங்கடத்தை உணர்த்தும்
புரியாத புதிர்கள் அவர்கள்!

*கேள்விகேட்கக் கற்றுக்கொடுத்த 
சாக்ரடீசில் இருந்து,
பதில்களைக் கற்றுக் கொடுத்த 
நியூட்டன் வரை
ஆசிரியர்களாய் இருந்ததாலேயே,
அறிவியல் உலகமும்,
அறிவு உலகமும் 
நிற்காது சுற்றிக்கொண்டிருக்கிறது!
இன்னும் சுற்றும்! 

எழு பிறப்பையும் 
          ஏற்றம் பெற்றதாய் 
உழலும் நெஞ்சை 
          உறுதி உள்ளதாய் 
தழைக்கும் எண்ணம் 
          தனிச் சிறப்பாய் 
உழைக்கும் எண்ணத்தை 
          உள்ளத்தில் ஊட்டலாய் 
இழைந்த மனமாய்
என்றும் உள்ளதாய் - எம் உள்ளத்திற்கும் 
நுழைந்த கடவுளே..!
நும் வழி காட்டலால் 
பிழைத்தேன் உலகில்
பரவச ஆனந்தத்தில் 
திளைத்தேன் மனதினில் 

கற்ற கல்வியை 
கருத்துடன் நல்கச்செய்தாய் 
பெற்ற அறிவை 
பேணி வளர்க்க செய்தாய் 
நிற்றல் என்பதை
நினைவில் பதித்தாய் (வாழ்வில்)
நற்செயல் அனைத்தையும்
நலமுறக் கற்ப்பித்தாய் - உன்னால் 

வாழ்வைக் கற்றேன்
வளம்பல பெற்றேன் 
ஊழ்வினை தந்த உன்னை
உலகம் உள்ளவரை
போற்றும் என் உள்ளம் - நன்றி
சாற்றும் என் உள்ளம்.

மலர் ஒளி